பெல்ஜியம் பெண்ணைத் தடவியவருக்கு விளக்க மறியல்

🕔 August 31, 2016

Prison - 0978– எப். முபாரக் –

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்த  நபர் ஒருவரை, அடுத்த மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

குச்சவெளி – ஜாயா நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குச்சவெளி கடற்கரைப் பகுதியில் குளிப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்த மேற்படி வெளிநாட்டுப் பெண்ணின் அருகில் சென்று, பாலியல் ரீதியில் அவரைக் கையினால் தடவியதாக, குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபரை திங்கட்கிழமை கைது செய்ததாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், குறித்த நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் எல்.ஜி. விஸ்வானந்த பெர்ணாண்டோஉத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்