வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக, யாழில் ஆர்ப்பாட்டம்

🕔 August 27, 2016

Protest - Jaffna -11
– பாறுக் ஷிஹான் –

டக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தன்னிச்சையாகச் செயற்படுவதாகக் கூறி, அதனைக் கண்டிக்கும் வகையிலான ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில், யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் இன்று சனிக்கிழமை ஈடுபட்டனர்.

முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப் பகுதியில் ஒன்று கூடிய மக்கள், சுலோகங்களுடன், மாகாண சபை உறுப்பினரின் செயற்பாட்டுக்கு எதிராக  கோஷங்களை எழுப்பினர்.

யாழ் – கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் எனும் பெயரில், அங்குள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் உள்ளடக்கிதாக, யாழ் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு பாடுபடும் அமைப்பு, இந்த போராட்டத்தை மக்களுடன் இணைந்து மேற்கொண்டிருந்தது.

மாகாண சபை உறுப்பினரின் செயற்பாடுகள் பக்கச்சார்பானவை எனவும், அவர் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு அரசியல் சாயம் பூச முயற்சிப்பதாகவும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் –  கிளிநொச்சி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில், மாகாண சபை உறுப்பினர் அஸ்மின், யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் நடத்தவிருந்த விஷேட திட்டமிடல் அமர்வினை, பகிஸ்கரிப்பதுடன் அதனை எதிர்ப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்திருந்தனர்.Protest - Jaffna -22

Comments

புதிது பேஸ்புக் பக்கம்