வாகன விபத்து; முச்சக்கர வண்டி சாரதி, ஸ்தலத்தில் பலி
🕔 August 27, 2016


– க. கிஷாந்தன் –
டிக்கோயா வனராஜா பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இன்று மதியம் இந்த விபத்து நிகழ்ந்தது.
நோர்வூட் பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற கெப் ரக வாகனமும், புளியாவத்தை பகுதியிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
கெப் ரக வாகன சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்ததாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கெப் ரக வாகன சாரதியை கைது செய்துள்ளதாக, ஹட்டன் பொலிஸார் கூறினர்.
இவ்விபத்தினால் அவ்வீதியில் சில மணிநேரம் போக்குவரத்துக்கள் தாமதமாகின.

Comments

