முன்னால் சென்ற வாகனத்தை முட்டிய முச்சக்கர வண்டியின் சாரதி, வைத்தியசாலையில்
– க. கிஷாந்தன் –
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதி கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், காயமடைந்த ஒருவர் – கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
பத்தனை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, தலவாக்கலை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற வேனுடன் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றதாக, திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் காரணமாகவே, இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியே படுங்காயங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடதக்கது.