ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், அமைச்சர் றிசாத் ஆஜர்

🕔 August 26, 2016

Rishad - 032கில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆஜராகியுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில், சதொச நிறுவனத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.

சதொச நிறுவனத்திற்கு தற்போது பொறுப்பான அமைச்சராக ரிஷாத் பதியுதீன் இருப்பதால், அவரிடம் வாக்குமூலம் பெறப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்