இத்தாலியில் கடுமையான நில நடுக்கம்; 73 பேர் பலி
🕔 August 24, 2016
இத்தாலியின் மத்தியப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கம் காரமாக ஆகக்குறைந்தது 73 பேர் பலியாகியுள்ளனர் என்று இத்தாலிய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கமானது 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் ரோமிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கம் சுமார் 20 முதல் 30 விநாடிகள் வரை நீடித்ததாகவும், ரியட்டி மாகாணத்தில் உள்ள அமட்ரைஸ் நகரில் வீடுகள் பலவும் இடிந்து சேதமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நில நடுக்கத்தின் காரணமாக 73 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.