திருட்டுத் தொலைபேசி வைத்திருந்தவருக்கு, விளக்க மறியல்: மூதூரில் சம்பவம்

🕔 August 24, 2016

Prison - 0978– எப். முபாரக் –

திருட்டு கைடயக்கத் தொலைபேசியொன்றினை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவரை, செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என். றிஸ்வான் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார்.

மூதூர்த – தக்வாநகர் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் ஐம்பதாயிரம் ரூபாய்  பெறுமதியான திருட்டு  அலைபேசியொன்றினை தம் வைத்திருந்தார்.

கையடக்கத் தொலைபேசி உரிமையாளர், மூதூர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, குறித்த கையடக்கத் தொலைபேசியின்  ரகசிய இலக்கங்களை வைத்து, திங்காட்கிழமை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேகநபர் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்