சாய்ந்தமருதில் சக்காத் திட்டத்தினூடாக, உலர் உணவு வழங்கி வைப்பு

🕔 June 21, 2015

Sakath food - 01-எம்.வை. அமீர், எம்.ஐ. சம்சுதீன்-

சாய்ந்தமருது நலன்புரி மன்றத்தின் அனுசரணையில், ஹிதாயா பவுண்டேசனின் சக்காத் திட்டத்தின் ஊடாக, உலர் உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது – மல்ஹாருஸ் சம்ஸ் மகாவித்தியாலயதிதில் இடம்பெற்றது.

டொக்டர் என். ஆரீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது நலன்புரி மன்றத்தின் ஆலோசகர் – சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்வின் இணைப்பாளரான பொறியலாளர் கமால் நிஷாத் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் றமீஸ் அபூபக்கர் உள்ளிட்ட நலன்புரி மன்றத்தின் உறுப்பினர்களும், இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன் போது, சுமார் 200 பயனாளிகளுக்கு – உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.Sakath food - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்