டலஸ் இடத்தை யாப்பா நிரப்பினார்; சு.கட்சியின் புதிய நியமனம்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவராக, நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான நியமனக்கடிதத்தை இன்று வழங்கினார்.
ஏற்கனவே, இந்தப் பதவியை வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, தனது பதவியை ராஜிநாமாச் செய்திருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆரவான – ஒன்றிணைந்த எதிரணியினரின் தொகுதி அமைப்பாளர் பதவிகள் அண்மையில் பறிக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து, டலஸ் அலகப்பெரும தனது பதவியினை ராஜிநாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.