எட்டு நாட்களின் பின்னர், நாமலுக்கு பிணை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவவரை பிணையில் செல்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இன்று திங்கட்கிழமை அனுமதியளித்தார்.
இவர்களை ஒரு மில்லியன் ரூபாய் ரொக்க பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபாபெறுமதியான 04 சரீரப்பிணையிலும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
நாமல் ராஜபக்வுஷக்கு சொந்தமான நிறுவனத்தினூடாக, முறைக்கேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 15ஆம் திகதி நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.