கொழும்பு மேயராகிறார் ரோசி

🕔 August 21, 2016

Rosi senanayake - 022முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயக்க, கொழும்பு மாநகரசபையின் மேயராக நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரியவருகிறது.

தற்போது பிரதமர் காரியாலயத்தில் பணியாற்றிவரும் ரோசி சேனநாயக்க, கொழும்பு மாநகரசபை மேயர் ஏ.ஜே.எம். முஸம்மிலினுடைய இடத்துக்கு நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

கொழும்பு மேயர் முஸம்மில், இலங்கைக்கான மலேசியத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.

இது தொடர்பில், ஊடகமொன்று முஸம்மிலை தொடர்பு கொண்டு கேட்டபோது; தன்னை தூதுவராக நியமிப்பதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், இன்னும் அந்தச் செயற்பாடு நிறைவடையவில்லை எனக் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்