புகையிரதத்தில் மோதுண்டு, 04 யானைகள் பலி
🕔 August 17, 2016
புகையிரதத்தில் மோதுண்டு நான்கு காட்டு யானைகள் நேற்றிரவு உயிரழந்துள்ளன.
தலைமன்னாரில் இருந்து, கொழும்பு நோக்கி பயணித்த புகைவண்டியிலேயே இந்த யானைகள் மோதுண்டுள்ளன.
தலைமன்னாரில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த ரயில், இரவு 11.45 மணியளவில் செட்டிக்குளம் மெனிக்பாம் புகையிரத வீதியில் கூட்டமாக நின்ற யானைகளின் மீது மோதியதில் 04 யானைகள் உயிரிழந்துள்ளன.
உயிரிழந்த 04 யானைகளில் ஒன்று குட்டியாகும்.
சம்பவ இடத்திற்கு இன்று புதன்கிழமை காலை வந்த செட்டிக்குளம் பொலிஸார் மற்றும் வனவள திணைக்கள அதிகாரிகள், உயிரிழந்த யானைகளை மீட்டுள்ளனர்.