வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ஜவாஹிர்; கடமைகளைப் பொறுப்பேற்றார்

🕔 August 16, 2016

Dr. Jawahir - 011– முன்ஸிப் அஹமட் –

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக, டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் நேற்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேற்படி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகப் பணியாற்றும் வகையிலான நியமனக் கடிதம், கடந்த வாரம் இவருக்கு வழங்கப்பட்டது.

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையை சொந்த இடமாகக் கொண்ட டொக்டர் ஐ.எம். ஜவாஹிர், அரசாங்க வைத்தியத்துறையில் 17 வருட காலமாகப் பணியாற்றி வருகின்றார்.

1999ஆம் ஆண்டு வைத்தியராக நியமனம் பெற்று, முதலாவதாக பொலநறுவைப் பிரதேசத்தில் கடமையாற்றிய இவர், பின்னர் – நிந்தவூர், பாலமுனை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் மொரட்டுவ பிரதேச வைத்தியசாலைகளில் வைத்திய அதிகாரியாகவும், மாவட்ட வைத்திய அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

வைத்திய நிர்வாகத்துறையில் முதுமானி பட்டப் பின்படிப்பினை – இவர் நிறைவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்