காதலனுடன் வந்திருந்த பிரான்ஸ் நாட்டு பெண், ராவணா நீர் வீழ்ச்சியில் விழுந்து மரணம்

🕔 August 15, 2016

Rawana - 011

– க. கிஷாந்தன் –

காதலனுடன் இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்திருந்த பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவர், ராவணா நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பண்டாரவளை ராவணா எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்கு வந்தபோது, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ராவணா எல்ல நீர்வீழ்ச்சியின் அபாயகரமான மலைப்பகுதியை நோக்கி ஏறும் சந்தர்ப்பத்திலேயே, குறித்த பெண் தவறி விழுந்துள்ளார்.

தனது காதலனுடன் இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்திருந்த 19 வயதுடைய மரீனா க்ரூஸ் எனும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ் சம்பவம் குறித்து எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்