பேரீச்சம்பழ விநியோகத்தில், யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் புறக்கணிப்பு

🕔 June 21, 2015

dates fruit - 01– பாறுக் ஷிஹான் –

புனித நோன்பு மாதத்தினை முன்னிட்டு – யாழ்ப்பாணத்தில் இலவமாக விநியோகிக்கப்பட்ட பேரிச்சம் பழங்கள், இம்முறை யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிடைக்கவில்லையென புகார் தெரிவிக்கப்படுகிறது.

ரமழான் மாதத்தினை முன்னிட்டுஇ சஊதி அரேபிய அரசாங்கத்தினால், இலங்கை முஸ்லிம்களுக்கென ஒரு தொகுதி  பேரீச்சம் பழங்கள் – இலவசமாக வழங்கப்பட்டன. இந்தப் பழங்கள் தற்போது, நாடளாவிய ரீதியில் பகிரப்படுகின்றன.  அந்தவகையில், யாழ்பாணத்தில் விநியோகிக்கப்பட்ட பேரீச்சம்பழ பங்கீட்டில், யாழ் பல்கலைக்கழ முஸ்லிம் மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த காலங்களில்இ இவ்வாறான  பேரிச்சம்பழங்கள், யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ்ப்பாண பிரதேசத்துக்கென விநியோகிக்கப்பட்ட பேரிச்சம் பழங்கள், சில தரப்பினருக்கு – பல தடவை  வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில், யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 450 க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவர்கள் மற்றும் வைத்தியசாலை தரப்பினர் உள்ளிட்டோர், இம்முறை பேரிச்சம்பழ விநியோகத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

Comments