நாட்டுப் பற்றாளர் விமலின் ஆடம்பரம்; 04 கோடி 27 லட்சம் பெறுமதியான, அதிசொகுசு வாகனம் இறக்குமதி
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, சுமார்04 கோடி 27 லட்சம் ரூபா பெறுமதியான டொயோட்டா லான்ட் க்குரூசர் (Toyota Land Cruiser ) அதி சொகுசு ரக ஆடம்பர வாகனமொன்றினை சுங்க வரியின்றி இறக்குமதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுங்க வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்யும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி, இந்த வாகனத்தினை வீரவன்ச கொள்வனவு செய்துள்ளார்.
வாகன இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றின் ஊடாக, இலக்கம் 74 M, மங்கள மாவத்தை – தெற்கு ஹோகந்த, ஹோகந்த எனும் முகவரிக்கு மேற்படி வாகனம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வாகனத்தின் மிகச் சரியான பெறுமதி, 04 கோடியே 26 லட்சத்து 71 ஆயிரத்து 337.50 ரூபாவாகும். ஆயினும், இந்த வாகனத்தினை சுங்க வரியின்றி, 62,500 அமெரிக்க டொலர்களைச் செலுத்தி, வீரவன்ச இறக்குமதி செய்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் மூலம் 50 ஆயிரம் டொலர் பெறுமதியான வாகனங்களையே கொள்வனவு செய்ய முடியும்.
தற்போதைய அரசாங்கம் அதனை 65 ஆயிரம் டொலர்களாக அதிகரித்துள்ளது.