தாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்பு; நால்வர் பலி, 20 பேருக்கு அதிகமானோர் காயம்
தாய்லாந்தின் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா மையங்களை இலக்காகக் கொண்டு, இந்தக் குண்டு வெடிப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன.
தாய்லாந்தின் ஹுவா ஹின், புகெட் போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடங்களில் இன்று வெள்ளி கிழமை காலை தொடர்ச்சியாக மேற்படி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலில் நான்கு பேர் பலியாகியுள்ளதோடு, இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலோனோர் வெளிநாட்டினர் எனத் தெரியவருகிறது.
இந்தக் குண்டு வெடிப்புகளுக்கு எந்த அமைப்பும் இதுவரை உரிமை கோரவில்லை.
“இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் அல்ல என்றும், இதற்கு உள்ளூர் நாசகார வேலையே காரணம்” என்றும், தாய்லாந்து நாட்டின் பொலிஸ் துணை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.