20 ஆவது திருத்தம் : சிங்கள தேசியவாதிகளின் சதி
தேர்தல் மறுசீரமைப்பு என்பது – தற்போது இருக்கின்ற தேர்தல் முறைமையில் குறைபாடுகளை களைவதற்கான நடவடிக்கையாக இருக்கவேண்டும். மாறாக, இருக்கின்ற நல்ல அம்சங்களை சீர்குலைத்து, மேலும் புதிய சிக்கல்களை தோற்றுவிக்கும் முறைமையாக இருக்கக்கூடாது.
தற்போது அமுலில் உள்ள முறைமையான விகிதாசார பிரதிநிதித்துவம் 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில், ஐந்தில் நான்கு பெரும்பான்மையுடன் அமோக வெற்றியீட்டிய ஜே.ஆர். ஜெயவர்தனவினால் 1978 அரசியல் யாப்பினூடாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் 1977 தேர்தல் வரையில் நடந்த தேர்தல்கள் அனைத்தும் ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய தொகுதிவாரியான First Past the Post System என்ற முறைமையில் நடந்தது. ஆனால் இந்த முறைமை மூலம் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் செல்பவர்களின் என்னிக்கை, மக்களின் ஆணையை சரியான முறையில் பிரதிபலிப்பது இல்லை.
1977 தேர்தலில் 50.92% வாக்குகளை பெற்ற ஐ.தே.கட்சியானது, மொத்தம் 140 நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்று (மொத்தம் 168 உறுப்பினர்களில்) 83% வீதமான உறுப்பினர்களை பெற்றெடுத்தது. ஆனால் தோல்வியுற்ற ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி 29.72% வாக்குளை எடுத்திருந்தும் 08 நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் பெற்றது. அதேசமயம் 6.75% மாத்திரமே பெற்ற தமிழர் விடுதலை கூட்டணி கட்சி 18 உறுப்பினர்களை பெற்று பாராளுமன்றத்தில் எதிர்கட்சி அந்தஸ்த்தை பெற்றது.
இப்படியான பெரிய குறைபாட்டினை கொண்டிருந்த தொகுதி வாரியான தேர்தல் (FPP) முறையை மாற்றி, ஜே.ஆர். ஜெயவர்தன விகிதாரசார பிரதிநிதித்துவ முறைமையை அறிமுகப்படுத்தியமையானது உண்மையில் மிகச்சிறந்த செயலாகும்.
1977 க்கு பின்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் நடந்த தேர்தல்கள் அனைத்திலுமே, மக்கள் அளித்த வாக்குகளுக்கு ஏற்ற விகிதத்தில் அரசியல் கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர்களை பெறக்கூடியதாக இருந்தது (except for the Tamil parties TULF / TNA). Majority of the Electors got some kind of value for their votes.
மேலும், கடைசியாக 2010 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலை விடுத்து, அதற்கு முன்னர் நடந்த அனைத்து தேர்தல்களின் முடிவுகளும் ஒரே மதிரியாகவே அமைந்தன. அதாவது, ஆட்சி அமைப்பதற்கு ஐ.தே.கட்சி அல்லது ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சிக்கு சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு மிகவும் அவசியமாக இருந்தது.
ஆனால், இந்த முறைமையில் இருந்த ஒரேயொரு குறைபாடான ஒரே கட்சியின் வேட்பாளர்களிடையே இடப்பட வேண்டிய தெரிவு வாக்கு என்பது, உட்கட்சி போட்டியை தூண்டுவதால், இது பெரும் சாபக்கேடாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த சாபக்கேட்டை நீக்குவதர்கான தீர்வு என்ற போர்வையில் கொண்டுவரப்படவிருக்கின்ற தேர்தல் மறுசீரமைப்பு திட்டம் – தேசியவாத சிங்கள கட்சிகளான ஸ்ரீ.சு.கட்சி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றின் மிகவும் ஆபத்து மிகுந்த சூழ்ச்சியான திட்டம் என்பதில் சந்தேகம் இல்லை.
மறுபடியும் 160 தேர்தல் தொகுதிகளை அறிமுகப்படுத்தி பெரும்பான்மையான சிங்கள தொகுதிகளை வெல்வதன் மூலம், சிறுபான்மை கட்சிகளின் ஆதரவுகளின்றி இலகுவாக அறுதி பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைக்கலாம் என, ஸ்ரீ.சு.கட்சி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றின் கூட்டணி – மிகப்பெரிய சதியை அரங்கேற்றி இருப்பது, ஏன்தான் இன்னமும் எமது முஸ்லிம் கட்சி தலைவர்களுக்கு புரியமாட்டேன் என்கிறது?
மஹிந்த ராஜபக்ஷ அணியிலுள்ள ஸ்ரீ.ல.சு.கட்சியினரின் கோரிக்கையான, நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை 255 ஆக அதிகரித்து 160 தொகுதிகள் ஊடாக 165 (FPP) உறுப்பினர்களை தெரிவு செய்யும் திட்டமானது, முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளின் பேரம் பேசும் அதிகாரத்தை ( bargaining power) அடியோடு இல்லாதொழிப்தற்கான, பெரும் செயல் திட்டமாகும்.
1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், சிறிமா அம்மையாரின் பொருளாதார கொள்கையானது, மக்கள் மீது திணித்த சுமை – தேர்தல் பேசுபொருளாக (Core Election Issue) இருந்தது. ஆனால் என்று மகிந்த ராஜபக்ஷ ஆட்சியை தொடங்கினாரோ, அன்றிலிருந்து இன்று வரை, இனவாதம் ஒன்றுதான் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கிறது. பெரும்பான்மை சிங்களவர்களும் – எந்த கட்சி அதிகமாக இனவாதம் பேசுகிறதோ, அந்த கட்சிக்கே அதிக வாக்குகளை வழங்கிப் பழகிவிட்டார்கள்.
இன்று அப்பட்டமாக இனவாதம் பேசும் ஐ.ம.சு. முன்னணியின் (சுதந்திரக் கட்சி) திட்டமானது, அதிகளவில் தேர்தல் தொகுதிகளை கோருவதன் மூலம் – அதிகளவு சிங்கள தொகுதிகளை உருவாக்கி, சிங்கள இனவாதிகளின் வாக்குகள் மூலம் – இலகுவாக அறுதிப் பெரும்பான்மையை எட்டுவதாகும்.
அவர்கள் கோருகின்ற 160 தொகுதிகளில் 134 தனி சிங்கள தொகுதிகளும் 26 சிறுபான்மையினரின் தொகுதிகளாகும்.
பின்வருபவை சிறுபான்மை தொகுதிகளாகும்;
வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை, மட்டக்களப்பு (2), பட்டிருப்பு, கல்குடா, திருகோணமலை, மூதூர், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ் தேர்தல் மாவட்டத்திலுள்ள 06 தொகுதிகள் (based on the 2014 Electoral List in accordance with the Article 98 (3), (4), (5) & (6) of the Constitution). வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் : கொழும்பு மத்தி, புத்தளம், பேருவளை, ஹரிஸ்பத்துவ, கொத்மலை, நுவரெலியா மற்றும் மஸ்கெலியா (will be separated into 3 electorates).
தொகுதி வாரியான முறைமையின் கீழ், 134 சிங்கள தொகுதிகளில் 50% க்கும் அதிகமான வாக்குகள் எடுத்தாலே 85% வீதமான தொகுதிகளை வெல்ல முடியும் (1977 election results scenario will repeat). அதாவது 114 தொகுதிகளில் இலகுவாக வெற்ற பெறலாம். ஏனைய 14 உறுப்பினர்கள் மாவட்ட விகிதாசார முறைமை மற்றும் தேசியப் பட்டியல் மூலமாகக் கிடைத்தால், அறுதி பெரும்பான்மையைப் பெற்ற விடலாம். இதனூடாக, சிறுபான்மை கட்சிகளின் எந்தவித உதவியும் இல்லாமல் ஆட்சி அமைத்து விடலாம்.
மஹிந்த ஆதரவு சுதந்திரக் கட்சி குழுவினரின் திட்டம் இப்படி இருக்க, ஜனாதிபதி மைத்ரியின் 237 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனும் புதிய திட்டமானது, (145 FPP members, 55 District PR members & 37 National List Members) சிங்கள கட்சிகளுக்கு இலகுவாக பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்து, சிறுபான்மை கட்சிகளின் பேரம் பேசும் சக்தியினை அடியோடு இல்லாது ஒழித்துவிடும்.
Chances are there that after delimitation of electorates, Colombo Central & Harispathuwa will become single member constituencies. NuwaraEliya-Maskeliya will be made into two separate electorates. Only Batticaloa and Potuvil will remain as multi member’s constituencies.
இறுதியில் 143 தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்படலாம். அதில் மட்டக்களப்பும் பொத்துவிலும் இரட்டை தொகுதிகள் என்றால், மொத்தம் 145 பேர் (under FPP system) தெரிவு செய்யப்படுவர். இந்த 143 தொகுதிகளில் 23 சிறுபான்மை தொகுதிகளும் 120 சிங்கள தொகுதிகளும் உருவாக்கப்படலாம்.
120 சிங்கள தொகுதிகளில் 50% வாக்குகள் எடுத்தாலே 85% தொகுதிகளை அதாவது 102 தொகுதிகளை இலகுவில் வெற்றிபெற முடியும். (Again 1977 scenario ) 237 பேர் உள்ள பாராளுமன்றத்தில் அறுதி பெரும்பான்மையின் எண்ணிக்கை 119 ஆகும். ஆட்சியமைக்க தேவைப்பட்ட மற்ற 17 உறுப்பினர்களையும் மாவட்ட விகிதாசாரம் மற்றும் தேசியப்பட்டியல் மூலம் இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
எப்படிப் பார்த்தாலும் – சிங்கள தொகுதிகளின் எண்ணிக்கையானது, அநியாயத்துக்கு அதிகரிப்பதால், (due to the higher number of FPP MPs) இனவாதம் பேசும் சிங்கள கட்சிகளுக்கு, இனிமேல் சிறுபான்மை கட்சிகளின் உதவி தேவைப்படாது.