16 கோடி ரூபாய் பெறுமதியான கைக் கடிகாரம், சஊதி இளவரசியிடமிருந்து கொள்ளை

🕔 August 6, 2016

Watch - 012ஊதி அரேபியாவின் இளவளசியொருவரின் கைக் கடிகாரம், பிரான்ஸ் நாட்டில் வியாழக்கிழமையன்று கொள்ளையிடப்பட்டுள்ளது.

ஆயுதம் தாங்கிய இரண்டு நபர்கள், மேற்படி இளவரசியிடமிருந்து – குறித்த கடிகாரத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொள்ளையிடப்பட்ட கைக் கடிகாரம் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானதாகும். இலங்கைப் பெறுமதியில் 16 கோடி ரூபாவுக்கும் அதிமான தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் நாட்டில் உற்பத்தி செ்ய்யப்பட்ட இந்தக் கடிகாரத்தினை, மேற்படி இளவரசி அணிந்து கொண்டு சென்றபோதே, கொள்ளையிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இளவரசி ஆபத்துக்கள் ஏதுமின்றி தப்பியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்