கண்டி நகரிலிருந்து கெட்டம்பே, அங்கிருந்து பேராதெனிய சந்தி; பாத யாத்திரைக்கு வந்த சோதனை

🕔 July 28, 2016

Pada yathra - 0123ன்றிணைந்த எதிரணியினரின் பாத யாத்திரை கண்டி – கெட்டம்பேயிலிருந் ஆரம்பமாகவிருந்த நிலையில், அது – பேராதனை சந்திக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து பாத யாத்திரியை ஆரம்பமானது.

ஏலவே, கண்டி நகர் பகுதியிலிருந்து குறித்த பாத யாத்திரை ஆரம்பமாகும் என்று, எதிரணியினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், கண்டி நகர் பகுதியிலிருந்து பாத யாத்திரையை ஆரம்பிப்பதற்கு நேற்றைய தினம் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், கண்டி – கெட்டம்பே பகுதியிருந்து பாத யாத்திரையை தொடங்குவதற்கான தீர்மானம் எட்டப்பட்டது.

ஆயினும், கெட்டம்பே பகுதியும் கண்டி நகர் பகுதிக்குள் வருகின்றது எனத் தெரிவித்த பொலிஸார், பேராதனை பாலம் அமைந்துள்ள பகுதியிருந்து, குறித்த யாத்திரையைத் தொடங்க முடியும் எனக் கூறினர்.

இதனையடுத்து, பேராதனை சந்தியிருந்து எதிரணயினர் தமது பாத யாத்திரையை ஆரம்பித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்