எதிரணியினரின் பாத யாத்திரை, கெட்டம்பேயிலிருந்து ஆரம்பமாகியது

🕔 July 28, 2016

Namal  - 98ன்றிணைந்த எதிரணியினரின் பாத யாத்திரை கண்டி கெடம்பே பிரதேசத்திலிருந்து சற்று முன்னர் ஆரம்பமாகியது.

கண்டி தலதா மாளிகையின் முன்னால் இந்த பாத யாத்திரை ஆரம்பமாகவிருந்த போதிலும், அதற்கு நேற்று நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

கெட்டம்பேயிலிருந்து ஆரம்பமாகும் இந்த நடைபவனி, மாவனல்லை வரையில் – இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.

பாத யாத்திரை ஆரம்பமாகுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ; தாம் ஏற்பாடு செய்துள்ள பாதை யாத்திரை தொடர்பில அரசு அச்சப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதேவேளை,  இன்று மாவனல்லையில் நிறைவுபெறும் பாத யாத்திரை, நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் மாவனல்லையிலிருந்து நெலுந்தெனிய வரை யாத்திரை செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுமதினம் சனிக்கிழமை, நெலுந்தெனியவிலிருந்து நிட்டம்புவ வரையிலும், நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை, நிட்டம்புவயிலிருந்து கிரிபத்கொட வரையிலும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாத யாத்திரையின் இறுதி நாளான திங்கட்கிழமை, கிரிபத்கொட நகரிலிருந்து கொழும்பு வரை நடைபவனி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்