நீதிமன்ற உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: பொலிஸ் மா அதிபர்

🕔 July 28, 2016

Pujith Jayasundara - 012ன்றிணைந்த எதிரணியின் பாத யாத்திரை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்பு நடவடிக்கை தொடர்பில், நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணிபயின் பாத யாத்திரை மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றினை கட்டுப்படுத்தும் வகையில் கண்டி மற்றும் மாவனல்லை நீதிமன்றங்களினால் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மேற்படி யாத யாத்திரை மற்றும் உறுப்பினர் ஊக்குவிப்பு நிகழ்வுகள் காரணமாக, அமைதியின்மை ஏற்படலாம் என்றும் பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார்.

எனவே, தத்தமது கட்சி செயற்பாடுகளின்போது நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு தெரிவித்துள்ள பொலிஸ்மா அதிபர், அதனை மீறி செயற்படுவோர் தொடர்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொதுமக்களை விழிப்புடன் செயற்படுமாறும் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், கண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்