நிலவுக்குள் சில ரணங்கள்; சிறுகதைத் தொகுதி வெளியீடு

🕔 July 27, 2016

 

Book release - 01ல்லொலுவ, மினுவாங்கொடை வஸீலா ஸாஹிர் எழுதிய ‘நிலவுக்குள் சில ரணங்கள்’ சிறுகதைத் தொகுதியின் வெள்ளோட்ட விழா எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.30க்கு கொழும்பு – 10 ஸ்ரீ சங்கராஜ மாவத்தையிலுள்ள அல் -ஹிதாயா மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பிரதம ஆசிரியருமான அல்-ஹாஜ் என்.எம். அமீன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

முதற்பிரதியை புரவலர் புத்தகப் பூங்கா நிறுவனர் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொள்ளவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்