கைத் தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்தவருக்கு, பருத்தித்துறை நீதிவான் வழங்கிய தண்டனை

🕔 July 26, 2016

Mobile Phone - 01கைத்தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்தவருக்கு அபராதம் விதித்த நீதவான், சமூகப் பணியில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டார்.

இச்சம்பவம் பருத்தித்துறையில் இடம்பெற்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது;

பருத்தித்துறையை சேர்ந்த 52 வயதுடைய நபரொருவர் , கடந்த ஞாயிற்றுக்கிழமை வீதியில் நின்று கைத்தொலைபேசியில் ஆபாசப்பட வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்டிருந்தார்.

அதன்போது, வீதி ரோந்து கடமையில் ஈடுபட்ட பொலிஸார், அதனை அவதானித்துள்ளனர். இதனையடுத்து, குறித்த நபரிடம் இருந்து கைத்தொலைபேசியை கைப்பற்றியதுடன், சம்பந்தப்பட்ட நபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் பருத்தித்துறை நீதிவான் நீதமன்றில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது,  சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, குற்றவாளிக்கு  நீதவான் பொ. சிவகுமார் 02 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்ததோடு, 50 மணித்தியாலங்கள் சமூகப் பணியில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்