பதவிகள் பறிக்கப்படும்; ஜனாதிபதி எச்சரிக்கை

🕔 July 26, 2016

Maithripala sirisena - 0987சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கட்சியின் அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான அணியிலுள்ள சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று திங்கட்கிழமை மாலை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர், சுதந்திரக் கட்சி மறுசீரமைக்கப்படும் என்றும், கட்சியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்களுக்கு பதிலாக புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.

இதன்போது, புதிய கட்சியை உருவாக்கி, சுதந்திரக் கட்சியை உடைக்கும் சதித்திட்டங்களுக்கு யாரும் துணைபோகக் கூடாது என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்ததாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்