நாய் பால் குடிக்கும் சிறுவன்; ஆறு வருடங்களாகத் தொடரும் பழக்கம்

🕔 July 25, 2016

Dog - 01சிறுவனொருவன் நாய் பால் குடித்து வருகின்றமை தொடர்பில் அவனின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

எவ்வளவு முயன்றும் சிறுவனின் இந்தப் பழக்கத்தினை மறக்கடிக்க முடியாமல் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் ஜார்கண்ட் பிரதேசத்தில் வசிக்கும் சுபேந்தர் சிங் – பிங்கி குமாரி ஆகியோரின் மகன் மொகித் குமார் எனும் சிறுவனே இந்தப் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளார்.

மொகித் குமார் – நான்கு வயது முதல் நாய் பால் குடித்து வருவதாக அவனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். தற்போது, அந்த சிறுவனுக்கு 10 வயதாகிறது.

அந்தச் சிறுவன் வசிக்கும் பகுதியிலுள்ள நாயொன்று, சிறுவனுக்கு பால் கொடுத்து வருகிறது.  சிறுவனின் இந்த பழக்கத்தை நிறுவத்துவதற்கு பெற்றோர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும், அவை பயனளிக்கவில்லை. இறுதியாக, தமது மகனை பாடசாலைக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்துப் பாதுகாத்து வருகின்றனர்.

மொகித் எனும் சிறுவனின் இந்தப் பழக்கம் குறித்து அவனின் தாய் கூறுகையில்; “மொகித் ஒருநாள் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு நாய் ஒன்று வந்தது. அந்த நாயின் அருகில் சென்று, அவன் அதனிடம் பால் குடிக்க ஆரம்பித்தான். அந்த நாயும் அவனுக்கு ஒத்துழைத்தது. எப்போதெல்லாம் அவனுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அவன் இந்த செயலில் ஈடுபட்டான். மொகித்துக்கு அது பிடித்திருந்தது” என்றார்.

“ஒரு நாள் பக்கத்து குடியிருப்பிலுள்ள நாயிடம் பால் குடிக்க மொகித் முயன்றிருக்கிறான். அந்த நாய் அவனை கடித்து விட்டது. அவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்தோம். நாய்கடிக்கு மட்டும்தான் அவனுக்கு சிகிச்சை வழங்கினார்கள். நாயிடம் பால் குடிக்கும் பழக்கத்தை மாற்றுவதற்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. இதனால் அவனை பாடசாலக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டோம் ” என்று அவனுடைய தாய் மேலும் கூறினார்.

“நாய் பால் குடிப்பதால் ஒரு தீங்கும் ஏற்படாது. ஆனால் தொற்றுகள் பரவுவதற்கு சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது” என வைத்தியர்கள் கூறுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்