சிங்கள சகோதரியின் நேர்மையினால், இழந்ததைப் பெற்றார் முஸ்லிம் பெண்; சேருநுவரவில் சம்பவம்
– எப். முபாரக் –
முஸ்லிம் பெண்ணொருவரின் பெருந்தொகைப் பணத்துடன் தவறவிட்ட கைப்பையினை, சிங்கள பெண்ணொருவர் கண்டெடுத்து இன்று திங்கட்கிழமை ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கைப்பையினுள் 46, 500 ரூபாய் பணம் இருந்ததாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியைச் சேர்ந்த ஹபிபுல்லாஹ் ரகுமத்தும்மா என்ற பெண்ணின் கைப்பை, 46, 500 ரூபாய் பணத்துடன் இன்று திங்கட்கிழமை காலை 11. 00 மணியளவில் சேருநுவர பஸ் நிலையத்தில் வைத்துக் காணாமல் போயிருந்தது.
இதனைக் கண்டெடுத்த சேருநுவர பகுதியில் வசிக்கும் கே.டீ.கே. ரம்யலதா என்ற பெண் கண்டெடுத்திருந்தார்.
இதனையடுத்து, சேருநுவர பொலிஸ் நிலையத்துக்கு குறித்த கைப்பையுடன் சென்ற பெண், அதனை பொறுப்பதிகாரி டபிள்யூ.வசந்த குமாரவின் முன்னிலையில், உரிய பெண்ணிடம் ஒப்படைத்திருந்தார்.