அரசாங்கம் முட்டாள்தனமாக நடந்து கொள்ளாது; மஹிந்த ராஜபக்ஷ

🕔 July 25, 2016

Mahinda - 094ன்றிணைந்த எதிர்கட்சியினரின் பாத யாத்திரைக்கு எதிராக எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும், அது – நிறைவேற்றப்படும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சி –  கண்டியில் ஆரம்பிக்கவுள்ள பாத யாத்திரை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்;

“ஒன்றிணைந்த எதிர்கட்சி – கண்டியில் ஆரம்பிக்கவுள்ள பாத யாத்திரையை நிறுத்துமளவுக்க அரசாங்கம் முட்டாள்தனமாக நடந்து கொள்ளாது.

அவ்வாறான பிழையான தீர்மானத்தை அரசாங்கம் எடுக்காது என்பதே எமது நம்பிக்கையாகும். ஏதேனுமொரு காரணத்துக்காக இந்த பாத யாத்திரை நிறுத்தப்பட்டால் ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு மக்களின் ஆதரவு அதிகரிக்கும்.

எனவே, பாத யாத்திரையை அரசாங்கம் நிறுத்தாது. பாத யாத்திரைக்கு எதிராக தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும்,யாத்திரை முன்னெடுக்கப்படும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்