ஜோன்ஸ்டன், மஹிந்தானந்த விரைவில் கைது?

🕔 July 25, 2016

Johnston+Mahindananda - 015நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெனாண்டோ மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

லங்கா சதொச நிறுவனத்தின் முக்கிய ஆவணங்களை எரித்தமை , அரச வாகனங்களை தனது நண்பர்களுக்கு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஜோன்ஸ்டன் பெனாண்டோ மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆட்சிக் காலத்தில், இவர்கள் அமைச்சர்களாகப் பதவி வகித்த காலப் பகுதிகளில், இந்தக் குற்றங்களைப் புரிந்தனர் எனக் கூறப்படுகிறது.

இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் நிதி மோசடி விசாரணை பிரிவு ஆகியவை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்