கட்சி நடத்த, பத்திரிகையாளர்கள் முற்படுகின்றனர்; மு.கா. தலைவர் ஹக்கீம் விசனம்
– முன்ஸிப் அஹமட் –
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நடத்துவதற்கு – பத்திரிகையாளர்கள் முற்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் விசனம் தெரிவித்தார்.
கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் மு.கா. பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டி – கட்டுகஸ்தோட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, மு.கா. தலைவர் மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்;
உட்கட்சி விவகாரங்களை ஊடகங்களில் பேசுவதாலும், கடிதங்களை எழுதுவதன் மூலமும் எதையும் சாதித்து விட முடியாது என்றார்.
எனவே, நடந்தவற்றினை பேசுவதைத் தவிர்த்து, தலைமை மீதான விசுவாசத்தினை நிரூபிக்கும் வகையில் செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மு.காங்கிரசின் சிரேஸ்ட பிரதித் தலைவர் முழக்கம் மஜீத், தலைவர் மீது மிகவும் விசுவாசம் மிக்க ஒருவர் என்றும் – ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.