குளங்களைப் புனரமைக்க 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

🕔 July 24, 2016

Wijithamuni soysa - 0125
– றியாஸ் ஆதம் –

ட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நீர்ப்பாசன குளங்களை புனரமைப்பதற்காக 2000 மில்லியன் ரூபா நிதியினை, நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜிதமுனி சொய்சா ஒதுக்கீடு செய்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி – உறுகாமம் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் விஜயம் மேற்கொண்டார்.

இதன்போதே, இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், உறுகாமம் மற்றும் கித்துள் ஆகிய இரண்டு குளங்களையும் இணைக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இன்றைய தினம் சித்தாண்டியில் நடைபெற்ற – நெல் அறுவடை விழாவிலும் அமைச்சர் விஜிதமுனி சொய்சா இன்று பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி,  கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்  அலிசாகிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர், முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், திணைக்களத் தலைவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.Wijithamuni soysa - 0124 Wijithamuni soysa - 0123

Comments

புதிது பேஸ்புக் பக்கம்