மனைவிக்கு கொடுத்த ‘பாதி’கள்!

🕔 June 19, 2015

ஜேர்மனை சேர்ந்த நபரொருவர், தனது விவாகரத்து ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டமைக்கு இணங்க, தன்னுடைய சொத்துக்களில் சரி பாதியை, அவரின் மனைவிக்கு வழங்கியுள்ள விதம் விநோதமானது.

குறித்த நபர், தன்னிடமுள்ள பொருட்களில் பாதியை வழங்குவதற்குப் பதிலாக, அனைத்துப் பொருட்களையும் பாதியாக வெட்டி, அவரின் மனைவியிடம் ஒப்படைத்துள்ளார்.

இதேவேளை, அந் நபர் – பொருட்களை பாதியாக அறுக்கும் வீடியோ ஒன்றையும், யூ ட்யூபில் பதிவேற்றியுள்ளார்.

அந்த பதிவில், ‘உன்னோடு வாழ்ந்த 12 வருட வாழ்க்கைக்கு நன்றி. என்னிடம் உள்ள பொருட்களில் பாதியை உனக்கு அளித்துள்ளேன்’ என்று குறிபிட்டுள்ளார்.

மனைவிக்கு வழங்கிய பாதிகள் போக, தனக்குச் சொந்தமான மறு பாதிகளை,  ஆன்லைன் இணையதளத்தினூடாக மேற்படி நபர் விற்பனை செய்துள்ளார்.

இதன்படி, இவருடைய பாதிக் கார்  50 டொலருக்கும் அதிகமான விலையில் விற்பனையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்