இலங்கை வரலாற்றில் அதிகளவான கொகேய்ன் இன்று சிக்கியது

🕔 July 21, 2016

Cocaine - 097லங்கையில் இதுவரை கால வரலாற்றில், அதிகளவான கொகேய்ன் போதைப் பொருள், இன்று வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது.

பேலியகொட களஞ்சியசாலையிலுள்ள கொள்கலனிலிருந்து சுமார் 274 கிலோ கொகேய்ன் மீட்கப்பட்டுள்ளதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை மீட்கப்பட்ட, அதி கூடிய நிறையுடைய கொகேய்ன் இதுவாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது வரை சுமார் 270 கிலோ கிராம் கொகேய்ன் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இரு கொள்கலன்களை சோதனையிட வேண்டியுள்ளதாகவும், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பணியில் போதைத் தடுப்பு பிரிவினருடன் பொலிஸார் மற்றும் அதிரடிப் படையினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொள்கலன்களை சீனி கொண்டு செல்வதற்காக பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் 93 கிலோ கிராம் கொகேய்ன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்