கண்டி நகரை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை, அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

🕔 June 19, 2015

Kandy - Hakeem - 01ண்டி நகரை 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2030 ஆம் ஆண்டு வரையில் அபிவிருத்தி செய்யும் செயல்திட்டத்தின் அங்குரார்ப்பணம் மற்றும் செயலமர்வினை – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

உலகப் பாரம்பரியம் மிக்க கண்டி நகரைப் பேணிப் பாதுகாத்து அபிவிருத்தி செய்தல், அந்த நகரின் உல்லாசப் பயணத் தொழில்துறை, வீடமைப்பு, சுற்றாடல், பொழுதுபோக்கு வசதிகள், வர்த்தகம் கைத்தொழில், மற்றும் சுகாதாரம் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உயரதிகாரிகள் மற்றும் வளவாலர்களுடனும் இங்கு கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன.

கண்டி நகரில் மட்டுமல்லாது, அதைச் சூழவுள்ள பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது உரிய கவனம் செலுத்தப்பட்டது.

இவ்வாண்டில் உலக வங்கி நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ள பாரிய செயல் திட்டங்களை, எவ்வாறு வெற்றிகரமாக மேற்கொள்வது என்பது பற்றியும் ஆராயப்பட்டது.

இந்நிகழ்வில், கண்டி மாநகர முதல்வர் மஹேந்திர ரத்வத்த, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் பெர்ணான்டோ, பணிப்பாளர் நாயகம் நயன மாவில்மட ஆகியோர் உட்பட கண்டி மாநகர சபை உறுப்பினர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், முன்னணி தனியார் நிறுவன உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.Kandy - Hakeem -0 02Kandy - Hakeem - 003

Comments

புதிது பேஸ்புக் பக்கம்