உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புகளுக்குத் தடை

🕔 July 20, 2016

Prohibited - 086ல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கல்விக் கருத்தரங்குகளுக்கு ஜூலை 27ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் இந்தத் தடையை விதித்துள்ளார்.

குறித்த உத்தரவை மீறி வகுப்புகளை நடத்துபவர்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்துக்கோ அல்லது பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 என்ற இலக்கத்துடனோ தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் 02ஆம் திகதி ஆரம்பமாகி 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்