அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவைக்கான ஒழுக்காற்றுக் குழு தெரிவு
🕔 July 19, 2016
– றிசாத் ஏ காதர் –
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதாந்த ஒன்றுகூடல் இன்று செவ்வாய்கிழமை இலுக்குச்சேனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது.
பேரவையின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்று கூடலில் – செயலாளர் எம். சஹாப்தீன், பொருளாளர் யூ.எல். மப்றூக் உள்ளிட்ட, நிருவாகசபை உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஒன்றுகூடலில், அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஐ.எல்.எம். இர்பான் கலந்து கொண்டு, பேரவையினை சிறப்பாக நடத்திச் செல்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
இதன்போது, அங்கத்தவர்களின் தொழிலாற்றலை விருத்தி செய்யும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றமை தொடர்பில் அங்கத்தவர்கள் தமது பிரேரணைகளையும், ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
பேரவைக்கான ஒழுக்காற்றுக் குழுவொன்றும் – இந்த ஒன்றுகூடலின்போது தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்: ஏ.எல்.எம். ஸினாஸ்