அமைச்சர் ஹக்கீம், யாழ்ப்பாணத்துக்கு புகையிரதத்தில் பயணம்

🕔 July 19, 2016
Hakeem - 085
– பாறுக் ஷிஹான் –

நீர் வழங்கல் மற்றும் நகர  அபிவிருத்தி  அமைச்சரும், மு.கா. தலைவருமான றவூப் ஹக்கீம் இன்று செவ்வாய்கிழமை யாழ் மாவட்டத்திற்கு, புகையிரதத்தின் மூலம் விஜயமொன்றினை மேற்கொண்டார்.

தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் காலம்சென்ற எம். சிவசிதம்பரத்தின் 93 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவு தின நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு, இவர் யாழ் மாவட்டத்துக்கு வருகை தந்தார்.

கொழும்பு கோட்டையிலிருந்து புகையிரதம் மூலம் – அமைச்சர் ஹக்கீம் இதற்கான பயணத்தினை மேற்கொண்டார்.
யாழ் பிரதான புகையிரத நிலையத்தை வந்தடைந்த அமைச்சரை, யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அமைபபாளர் ரொசான் தமீம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதன்போது, புகையிரத நிலையத்திருள்ள முக்கிய பிரமுகர்கள் கையெழுத்திடும் நினைவுப் புத்தகத்தில்,  அமைச்சர் ஹக்கீம் கையெழுத்திட்டார்.Hakeem - 086Hakeem - 087

Comments

புதிது பேஸ்புக் பக்கம்