பசில் ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகக் கைது

🕔 July 18, 2016

Basil - 976முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்கு மூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று காலை சமூகமளித்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

திவிநெகும திட்டத்தின் நிதியினை துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டிலேயே – பசில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இவ்வாறு கைது செய்யப்படுகின்றமை மூன்றாவது தடவையாகும்.

Comments