துருக்கியில் சதிப் புரட்சி; ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவிப்பு

🕔 July 16, 2016

Turkey - 097துருக்கியின்ஆட்சியை – தாங்கள் கைப்பற்றியுள்ளதாக, அந்த நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டின் முக்கிய இடங்களில் ராணுவம் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராணுவத் தரப்பினர், நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை வென்றெடுக்கும் நோக்கில் தமது நடவடிக்கை அமைந்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதற்கிடையே துருக்கிய பிரதமர் இல்ட்ரிம் ராணுவ சதிப்புரட்சி குறித்த தகவல்களை மறுத்துள்ளார்.

பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ரஜப் தையிப் அர்துகானின் தலைமையிலான ஆட்சி தொடர்வதாகவும், பொதுமக்களால் மட்டுமே தமது அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவைளை, மேற்படி நடவடிக்கையானது ராணுவ சதிப்புரட்சி அல்ல என்றும், ராணுவத்தின் ஒருசிலர் மேற்கொண்டுள்ள சட்டவிரோத நடவடிக்கையே இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்நடவடிக்கையுடன் தொடர்புடையவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே துருக்கிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் ராணுவத்தினரால் பணயக் கைதிகளாக சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.Turkey - 098

Comments

புதிது பேஸ்புக் பக்கம்