மு.காங்கிரஸின் சொத்துக்கள் வருமானத்தில் மோசடி?: தட்டிக் கேட்கிறது தவிசாளரின் கடிதம்

🕔 July 15, 2016

Basheer - 011
– முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சொத்துக்கள் மற்றும் வருமானங்கள் தொடர்பில் பாரிய முறைகேடுகளும், ஊழல்களும் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கட்சியின் தவிசாளர் பசீர் சேகுவூத், தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எழுதிய கடிதத்தில் இந்த விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

மு.காங்கிரசின் தலைமையகமான தாறுஸ்ஸலாம் கட்டிடம், அதனை அண்டியுள்ள நிலம்,  காணிகள் மற்றும் இவற்றினூடாக கடந்த காலங்களில் கிடைத்த வருமானங்கள் தொடர்பில் கட்சியின் தவிசாளர் தனது கடிதத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

மு.காங்கிரசின் சொத்துக்கள் மற்றும் வருமானங்கள் தொடர்பில் தனக்குள்ள சந்தேகங்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் உரிய பதிலை வழங்குமாறு தவிசாளர் தனது கடிதத்தில் கோரியிருந்தபோதும், மு.கா. தலைவர் உரிய பதிலை வழங்கவில்லை என அறிய முடிகிறது.

இதன் காரணமாக, மு.கா. தலைவருக்கு -தான் எழுதிய கடிதத்தினை ஊடகங்களுக்கும், மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்களுக்கும் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அனுப்பி வைத்துள்ளார்.

ஐந்து பக்கங்களைக் கொண்ட மேற்படி கடிதம் பின்வருமாறு;

Baseer - 01 Baseer - 02 Baseer - 03 Baseer - 04 Baseer - 05

 

Comments