சம்மாந்துறையில் காணி ஆவணங்கள் வழங்கி வைப்பு
– யூ.எல்.எம். றியாஸ் –
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு, காணி அனுமதிப்பத்திரம் மற்றும் ரன்பிம உறுதி வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது
சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ. மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், 07 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட 160 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களும், 70 குடும்பங்களுக்கு ரன்பிம உறுதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் இந் நிகழ்வில் பிரதம
அதிதியாக கலந்துகொண்டு, மேற்படி ஆவணங்களை வழங்கி வைத்தார்.
மாகாண காணி ஆணையாளர் டி.டி அனுரா தர்மதாச மற்றும் மாகாண காணி உதவி ஆணையாளர் ஜி. ரவிராஜன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.