தொகுதி அமைப்பாளர்கள் 15 பேரை, பதவி நீக்க தீர்மானம்

🕔 July 12, 2016

Duminda dissanayake - 01ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை 15 பேரை, அவர்களின் பதவியிலருந்து விலக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்ததிசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமது பணிகளை செய்யாத,செய்ய முடியாத அமைப்பாளர்களே இவ்வாறு பதவி நீக்கம்செய்யப்படவுள்ளதாகவும், இவர்களை மேலும் கட்சியில் வைத்திருப்பதனால், கட்சிக்கோ, நாட்டிற்கோ எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசாங்கத்தை அத்துடன் 2020ஆம் ஆண்டு அமைப்பதற்காக, கிராம மட்டத்தில் இருந்து கட்சியின் பலம் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

அமைப்பாளர் பதவி நிலவும் தொகுதிகளுக்கு பிரபலமான, அனுபவமிக்க, மக்களுடன் நெருங்கிய உறவைப் பேணுபவர்களை நியமிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாக உள்ளவர்களில் பலர், கட்சியை தவறாக வழிநடத்துவதுடன்,கட்சி இரண்டாக பிளவு படுவதற்கானவேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்