திருகோணமலையில் யுவதி கொலை; சகோதரியின் கணவர் மீது சந்தேகம்

🕔 July 8, 2016

Murder - 09– எப். முபாரக் –

திருகோணமலை மனையாவெளி சாரணர் ஒழுங்கையில் இளம் பெண் ஒருவர்  தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.

கணபதிப்பிள்ளை அஜந்தினி (வயது 23) என்ற யுவதியே இவ்வாறு தாக்கப்பட்டு இறந்துள்ளார்.

திருகோணமலை துறைமுக பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டவரின், சகோதரியினுடைய கணவர்  இத்தாக்குதலை மேற்கொண்டதாக விசாரணைகளின் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர் பள்ளிக்குடியிருப்பு தோப்பூர் பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்