27.5 பில்லியன் ரூபா செலவில் நீர் வழங்கல் திட்டம்; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்
– ஷபீக் ஹுஸைன் –
கம்பஹா மாவட்டத்தில் களனி கங்கையின் வலது கரையில் 27.5 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள பாரிய நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் – ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெணாட்டேபுள்ளே, அமைச்சின் செயலாளர், மேலதிகச் செயலாளர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர், பொது முகாமையாளர், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் மற்றும் பொறியலாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.