உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்த தாமதிப்பதை எதிர்த்து, பெப்ரல் அமைப்பு வழக்கு

🕔 July 5, 2016

PAFFREL - 098ள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தாமதித்து வருகின்றமைக்கு எதிராக, வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வார இறுதிக்குள் – இந்த வழக்கினைத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்ற அமைச்சு, தேர்தல்கள் ஆணைக்குழு, தேசிய எல்லைநிர்ணய குழு ஆகிய தரப்புக்களை, மேற்படி வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடவுள்ளதாக, நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி மேலும் கூறினார்.

தேசிய அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் ஒவ்வொருவரும், தேர்தல் நடக்கும் எனத் தெரிவித்து, வெவ்வேறு காலப் பகுதிகளைக் கூறி வருகின்றனர். இதனால், தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆகவேதான் நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்