உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில்; அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு

🕔 July 1, 2016

Faizer musthafa - 011நேற்றைய தினம் வியாழக்கிழமையுடன் ஆயுட்காலம் நிறைவுற்ற 23 உள்ளூராட்சி சபைகளில் 18 சபைகள் –  விசேட ஆளுநர்  ஒருவரின்  கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

மேற்படி 18 சபைகளில்  17 மாநகர சபைகளும், ஒரு நகர சபையும் அடங்குவதாகவும் அவர் கூறினார்.

மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும், 05 பிரதேசசபைகளின் காலம் முடிவுற்றுள்ள நிலையில், அப்பகுதி பிரதேசசெயலாளர்களின் கீழ்கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், விரைவில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறும் எனவும், உள்ளூராட்சி மன்றங்களின் காலம் நீடிக்கப்படவுமில்லை என்றும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி எல்லை நிர்ணயங்கள் இன்னும் பூர்த்தியாதமையினாலேயே, தேர்தலுக்கான காலம் நீடிக்கப்படுவதாகவும் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

Comments