பதுங்கு குழிக்கு அருகில், ஆர்.பி.ஜி. குண்டுகள் மீட்பு

🕔 July 1, 2016

Kilinotchi - RPG - 0003
– பாறுக் ஷிஹான் –

கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து 04 ஆர்.பி.ஜி. குண்டுகளை – குண்டு செயலிழக்கும் பிரிவினர் நேற்று வியாழக்கிழமை மீட்டனர்.

பொதுமக்கள் மற்றும் மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, குறித்த பகுதியில் குண்டு செயலிழக்கும் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, 04 ஆர்.பி.ஜி. குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை செயலிழக்கச் செய்வதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் குண்டுகள் செயலிழக்கப்படும்.

இதேவேளை, குறித்த இடத்தில் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில், பதுங்குகுழியொன்று உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.Kilinotchi - RPG - 0001

Comments