கல்முனை மாநகர சபை கூட்டத்தில் வழங்கிய குடிநீர் போத்தல்களில் துர்வாடை; உறுப்பினர் புகார்

🕔 July 1, 2016

Wijayaradnam - MMC - 098–  ஜுல்பிகா ஷெரீப் –

ல்முனை மாநகரசபையின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் போத்தலினுள் துர்வாடை வீசுவதாக, சபை உறுப்பினர் ஏ. விஜயரட்ணம் – மேயர் நிசாம் காரியப்பரிடம் புகார் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, இந்தப் புகாரினை சபை உறுப்பினர் விஜயரட்ணம் முன்வைத்தார்.

நேற்றைய மாதாந்த சபை அமர்வில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டன. இந்த நிலையில், குறித்த போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரிலிருந்து துர்வாடை வீசுவதாக சபை உறுப்பினர் ஏ. விஜயரட்ணம், மேயரிடம் புகார் செய்ததோடு, இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதற்க மேயர் நிசாம் காரியப்பர் பதிலளிக்கையில்; இது தொடர்பாக சுகாதாரப் பிரிவினருக்குத் தெரியப்படுத்தி, அவர்களினூடாக – குறித்த குடிநீர் நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்