பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும, தற்கொலை அச்சுறுத்தல்
🕔 June 30, 2016
பிரதியமைச்சர் பாலித தெவரபெரும, மின்விசிறியில் கழுத்தை கட்டிக்கொண்டு தற்கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
மத்துகம பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக, அப்பாடசாலைக்கு முன்பாக பிரதியமைச்சர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
பின்னர், அந்த ஆர்ப்பாட்டத்தினை உண்ணாவிரதப் போராட்டமாக பிரதியமைச்சர் பாலித மாற்றிக் கொண்டார்.
இந்த நிலையில், தனது கோரிக்கைகளுக்கு உரிய முறையில் பதில் கிடைக்காமையை அடுத்து, குறித்த பாடசாலையிலுள்ள மின் விசியில் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவர் இவ்வாறு தற்கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
தொடர்பான செய்தி: அரசிலிருந்து விலகுவேன்; பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும எச்சரிக்கை