டொக்டர் நக்பர் சீனா பயணம்; மருத்துவ பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கிறார்

🕔 June 29, 2016

Dr. Nakfer - 012– முன்ஸிப் அஹமட் –

ட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல். நக்பர் – சீன பாரம்பரிய மருத்துவ முகாமைத்துவம் மற்றும் சுகாதார மருத்துவ தொழில்நுட்பம் தொடர்பிலான பயிற்சிப் பட்டறையொன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு சீனா பயணமாகிறார்.

இம்மாதம் 30 ஆம் திகதி முதல் – ஜுலை 20 ஆம் திகதி வரை, சீனாவின் தலைநகரமான பீஜிங்கில் நடைபெறும் இந்தப் பயிற்சிப்பட்டறையில் இலங்கையிலிருந்து 05 பேர் கலந்து கொள்கின்றனர்.

மேற்படி ஐவரில் – டொக்டர் நக்பர் மட்டுமே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, இந்தக் குழுவிலுள்ள ஒரேயொரு முஸ்லிம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவில் நடைபெறும் மேற்படி பயிற்சி நெறியில், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளைச் சேர்ந்த பல வைத்தியர்கள் கலந்து கொள்கின்றனர்.

டொக்டர் கே.எல். நக்பர் – சுகாதார பிரதியமைச்சரின் இணைப்பு மருத்துவ உத்தியோகத்தராகவும், நிந்வூர் தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்வதற்காக, இந்தக் குழுவிலுள்ளவர்களின் பெயர்களை – சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் சிபாரிசு செய்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்